SuperTopAds

வரலாற்றில் இடம்பிடித்த ட்ரம்ப்-கிம் சந்திப்பு

ஆசிரியர் - Admin
வரலாற்றில் இடம்பிடித்த ட்ரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் நிறைவடைந்துள்ளது.
மாநாடு நடக்கும் இடத்துக்கு தனித்தனி கார்களில் வந்திறங்கிய ட்ரம்ப், கிம் ஆகிய இருவரும் முதன்முறையாக கைகுலுக்கி கொண்டனர்.


தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அதிபர் அவர்களே என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து கைகுலுக்கும போது வடகொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்தார். உலகத் தலைவர்களை சந்திக்கும் போது எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட குறைவான நேரத்தையே கிம்முடன் கைகுலுக்கும் போது ட்ரம்ப் எடுத்துக்கொண்டார்.
கைகுலுக்கலை அடுத்து இருவரும் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் மதிய உணவை முடித்த ட்ரம்பும் கிம்மும் அங்குள்ள தோட்டத்தில் உலாவினர். இருவரும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக கிம் தெரிவித்தார். இதையடுத்து புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்குவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இவர்களின் சந்திப்பு சிங்கப்பூர், தென்கொரியாவில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பப்பட்டது. எனினும் வடகொரிய ஊடகங்கள் இச்சந்திப்பை பெரிதாக ஒளிபரப்பவில்லை. ஆவணங்களில் கையெழுத்திட்ட பின், புன்னகைத்து, கைக்குலுக்கி ட்ரம்பும் கிம்மும் பிரிந்து சென்றனர்.