கத்தியால் குத்தியவருக்கு பிணை வழங்கியதை கண்டித்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முடக்கி இ.போ.சவினர் போராட்டம்!

ஆசிரியர் - Editor I
கத்தியால் குத்தியவருக்கு பிணை வழங்கியதை கண்டித்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முடக்கி இ.போ.சவினர் போராட்டம்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினை மூடி இ.போ.ச ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். 

பேருந்து நிலையத்திற்குள் உள்நுழையமுடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன்  "எமக்கு பாதுகாப்பு வேண்டும்", "நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்", 

"தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக" உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்நுழையாமல் காத்திருந்மையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு