பல்கலைகழக விரிவுரையாளரான பிக்குவிடம் 4 கோடியே 70 லட்சத்தை சுருட்டிய 71 வயது மூதாட்டி..
எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை தருவதாக கூறி சுமார் 4 கோடிய 70 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய 71 வயதான மூதாட்டி ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த மூதாட்டி கடவத்தை பிரதேசத்தில் தனக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தேரருக்கு கொடுப்பதாக கூறி குறித்த அவரிடம் இருந்து இந்த பணத்தை பெற்றுள்ளார்.
களனி பிரதேசத்தில் உள்ள விகாரையின் நிர்வாகியான தேரர் ஒருவரே இந்த இந்த மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வயோதிப பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களனி கொனவல, செலுவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், கடவத்தை மற்றும் கணேமுல்ல ஆகிய இடங்களில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர் எனவும் தெரிய வந்துள்ளது.
பெண்ணிடம் 4 கோடிய 70 இலட்சம் ரூபா பணத்தை இழந்த பிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.