வீடொன்றை உடைத்து மின் உபகரணத்தை திருடி, அதை 300 ரூபாய்க்கு விற்று வடை/ ஐஸ்கிறீம் வாங்கிய இரு சிறுவர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
வீடொன்றை உடைத்து மின் உபகரணத்தை திருடி, அதை 300 ரூபாய்க்கு விற்று வடை/ ஐஸ்கிறீம் வாங்கிய இரு சிறுவர்கள் கைது..

வீடொன்றை உடைத்து மின் உபகரணம் ஒன்றை திருடி 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வடை மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 11 வயது மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் வருவதாவது, மேற்படி சம்பவத்தில் இரு சிறுவர்களும் அயல் வீடு ஒன்றில் வீட்டார் இல்லாத நேரத்தில் பின் பக்கம் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் சிலவற்றை திருடி உள்ளனர். 

பின்னர் அதில் ஒரு மின் உபகரணத்தை 300 ரூபா பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அந்த உபகரணத்தின் உண்மைப் பெறுமதி 3,650 ரூபாவாகும். விற்பனை செய்து கிடைத்த 300 ரூபா பணத்திற்கு வடையும், ஐஸ்கிறீமும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

மற்றும் உபகரணங்களை பக்கத்தில் உள்ள ஒரு புதரில் எரிந்துள்ளனர். வீட்டார் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 

திருடப்பட்ட மின் உபகரணம் ஒன்றை 300 ரூபாவிற்கு வாங்கிய நபரும் சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு