22 மணித்தியால வேலைக்கு 800 ரூபாய் கூலி போதாது என கூறியதற்காக குடும்பஸ்த்தரை மயங்கும்வரை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல்...

ஆசிரியர் - Editor I
22 மணித்தியால வேலைக்கு 800 ரூபாய் கூலி போதாது என கூறியதற்காக குடும்பஸ்த்தரை மயங்கும்வரை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல்...

இரவும், பகலுமாக சுமார் 22 மணித்தியாலங்கள் வேலை செய்ததற்கு கொடுக்கப்பட்ட 800 ரூபாய் கூலி போதாது என கூறியதற்காக குடும்பஸ்த்தர் ஒருவரை மயங்கும்வரை இரும்பு கம்பிகளால் தாக்கிய சம்பவம் பாதுக்க என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. 

42 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் ஹங்வெல்ல துன்னான பிரதேசத்தில் இரும்பு துண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு