யாழ்.இளவாலையில் இருவேறு இடங்களில் பொலிஸார் சோதனை, இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் இருவேறு இடங்களில் பொலிஸார் சோதனை, இருவர் கைது!

யாழ்.இளவாலையில் இருவேறு இடங்களில் நேற்று பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்புக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரில் ஒருவர் 30 லீட்டர் கசிப்புடனும், மற்றையவர் 10 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 

இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு