கால்வாயில் கிடந்த சிசுவின் சடலம், 22 வயதேயான இளம்பெண் கைது!

ஆசிரியர் - Editor I
கால்வாயில் கிடந்த சிசுவின் சடலம், 22 வயதேயான இளம்பெண் கைது!

கால்வாயில் இருந்து பச்சிளம் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 22 வயதான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தெரணியகல - கல்ஹிட்டிகந்த என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. 

கால்வாயில் உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் இருப்பதாக 119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சிசுவின் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 

சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 22 வயதுடைய கல்ஹிட்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு