பிரிந்து வாழும் கணவனின் பெயரில் உலர் உணவு பொதியை பெறுவதற்கு முயற்சி! கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி படுகாயம், மனைவியின் தாய் பலி..

ஆசிரியர் - Editor I
பிரிந்து வாழும் கணவனின் பெயரில் உலர் உணவு பொதியை பெறுவதற்கு முயற்சி! கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி படுகாயம், மனைவியின் தாய் பலி..

பிரிந்து வாழும் கணவருடைய பெயரில் உலர் உணவு பொதியை பெறுவதற்கு முயற்சித்த பெண்ணையும் அவருடைய தாயாரையும் கணவன் கத்தியால் குத்தியதில் தாய் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 

நுவரெலியா - ஹெலகம பகுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொல்லப்பட்ட பெண்ணின் மகள் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் ஹெலகம பகுதியில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்திற்கு உலர் உணவு பெறச் சென்றுள்ளனர். அங்கு மகளின் கணவர் பெயரில் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள மகளும் தாயும் முயற்சித்தபோது மகளின் கணவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியை எடுத்து 

தாயையும், மனைவியையும் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த தாயும், மகளும் தெரிபஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ரிக்கில கஸ்கட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் முகுனகஹபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவராவார். இந்நிலையில் 27 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரிபஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு