சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என கூறி நீல இரத்தின கல்லை கொள்ளையடித்த நாடக நடிகர்!

ஆசிரியர் - Editor I
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என கூறி நீல இரத்தின கல்லை கொள்ளையடித்த நாடக நடிகர்!

தன்னை ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்திய நபர் நீல இரத்தினக் கல் ஒன்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வவுனியா மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்திய குறித்த நபர் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் வாரியபொல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் பல தொலைக்காட்சி நாடகங்களில் பொலிஸ் வேடங்களில் நடித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அவரிடமிருந்த நீல இரத்தினக் கல் மற்றும் சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு