இலங்கை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் துரித நடவடிக்கையால் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்து அகதிகள் மீட்பு!
306 இலங்கை அகதிகளுடன் பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறவித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் கனடா செல்வதற்கு கடல் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. கப்பலில் இருந்த இலங்கை குடிமகன் ஒருவர் கடற்படையினரை அழைத்து தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து,
கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியிருந்தது.பின்னர், கப்பலில் இருந்தவர்களை மீட்க முடிந்ததாக
சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சிங்கப்பூர் அதிகாரிகள் கப்பலில் இருந்தவர்களை மீட்டு வியட்நாமுக்கு அழைத்துச் சென்று,
அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.