யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து நீண்டதுார தனியார் பேருந்து சேவைகள் நாளை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து நீண்டதுார தனியார் பேருந்து சேவைகள் நாளை ஆரம்பம்..!

யாழ்.புதிய பேருந்து நிலையத்தலிருந்து நாளை செவ்வாய் கிழமை தொடக்கம் நீண்டதுார தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும். என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் பல்வேறு தடைகளால் குழம்பிப் போயிருந்த போதிலும் தொடர் நடவடிக்கை காரணமாக குறித்த இடத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் அனைத்தையும் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இரவு நேர கொழும்பு பஸ் சேவைகள் அங்கிருந்து நடைபெறுகின்ற நிலையில் உள்ளுர், வெளி மாவட்டம் தனியார் பேருந்து சேவைகளும் செவ்வாய்க்கிழமை முதல் இடம்பெறவுள்ளதாகவும்,

போக்குவரத்து பொலிஸாருக்கு உதவும் வகையில் மாநகரசபையால் திசைகுறிகாட்டி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தனியார் போக்குவரத்து பிரிவினரின் உள்ளுர் சேவை பேருந்துகள்,

பட உதவி - நிருஜன்

நெடுந்தூர பேருந்துதரிப்பிடத்திலிருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் தரிப்பு இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என்பதுடன் மீண்டும் வரும்போது பிரயாணிகளை நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கிச் செல்லும். 

அதேபோல இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளி மாவட்டங்களிற்கு செல்லும் நீண்டதூர பயணிகள் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக சத்திரத்துச்சந்தி சமிக்ஞை விளக்கினை அடைந்து அங்கிருந்து 

கே.கே.எஸ். வீதியூடாகச் சென்று பிரதான வீதியினை அடைந்து வெளிமாவட்டங்களிற்கான பயணத்தினை மேற்கொள்வதுடன் மீண்டும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பஸ்களும் இவ் வழிப்பாதையூடாகவே பயணத்தினை மேற்கொண்டு பஸ் தரிப்பிடத்தினை வந்தடையும். 

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்படும் வெளி மாவட்டங்களிற்கு செல்லும் நீண்டதூர பயணிகள் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி வீதிக்கு செல்வது தடை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு