SuperTopAds

மன்னாா் ”லங்கா சதோஸ” வளாகத்தில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள், 5ம் நாளககும் தொடந்து தோண்டப்படுகிறது...

ஆசிரியர் - Editor I
மன்னாா் ”லங்கா சதோஸ” வளாகத்தில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள், 5ம் நாளககும் தொடந்து தோண்டப்படுகிறது...

மன்னாா் நகாில் உள்ள சதோச விற்பனை நிலைய வளாகத்தில் தொடா்ச்சியாக எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுவரும் நிலை யில் அகழ்வு பணிகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மன்னாா் நகருக்குள் நுழையும் பகுதியில் லங்கா சதோச விற்பனை நிலைய வளாகத்தில் ஒரு பகுதி புதிய கட்டிடம் ஒன் றை அமைப்பதற்காக விற்பனை செய்யப்பட்டது. 

அந்த வளாகத்தில் அகழப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்டதை தொடா்ந்து மேற்படி வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 5 நாட்களாகின்றது. இன்றும் மன்னாா் மாவட்ட நீதிவான் ஏ.ஜீ.அலெக் ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன. 

'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண் ஆகியவற்றில் இன்று ஒரே நேரத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது மனித எலும்புகள், பற்கள்,பொலித்தீன் பக்கற், சோடா மூடி போன்றவை மீட்கப்பட்டுள்ளன. மேலும் விசேட சட்ட வைத்திய நிபுணர் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் அகழ்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் இந்த எலும்புகளின் பிண்ணனியில் நீங்கா மர்மம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.