SuperTopAds

மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்கள இனத்தவர் ஒருவரை நியமிக்க முயற்சி. த.தே.கூ எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்ட அரச அதிபராக சிங்கள இனத்தவர் ஒருவரை நியமிக்க முயற்சி. த.தே.கூ எதிர்ப்பு..

மன்னார் மாவட்டத்திற்கு பெரும்பான்மை இனத்தவர் ஒருவரையே மீண்டும் அரச அதிபராக நியமிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்ளிற்கும் தமிழ் அரச அதிபரை நியமிப்பதற்கு பிரதமர் கொள்கை அளவில்  இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலும் தற்போது அதனை மீறி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே மன்னார் மாவட்டத்தின் அரச அதிபராக சிபார்சு செய்யப்பட்டுள்ளார். 

இதேநேரம் மன்னார் மாவட்டத்தில் முன்னர் மேலதிக அரச அதிபராக இருந்து தற்போது அமைச்சின் செயலாளராக உள்ள  முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அரச அதிபராகவுள்ள திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராகவும் தற்போதைய கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரச அதிபராக பெரும்பான்மை இனத்தவரை நியமிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். 

இதனால் குறித்த விடயம் தொடர்ந்தும் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.