SuperTopAds

லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள்- 2018

ஆசிரியர் - Admin
லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நாள்- 2018

இலங்கை நாட்டில் தமிழீழ தமிழ் மக்கள் மீது இலங்கை பௌத்த பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவெழுச்சி நாளினை நேற்று உலகெல்லாம் வாழும் தமிழினம் நினைவு கூர்ந்தது. அந்தவகையில் பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புகளின் ஏற்பாட்டில் பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மாலை 4.00 முதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளுக்கான ஈகைசுடரினை திருமதி சிவகுமார் அனுஷா ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் திரு ரவிசங்கர் பிரித்தானிய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் .

தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் திரு செல்வகுமரன் ஏற்றி வைக்க தொடர்ந்து கல்லறைக்கான மலர்மாலை வணக்கத்தோடு பொதுமக்கள் சுடர் வணக்கத்தினையும் செலுத்தினார்கள் .முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி உரையினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வெள்ளை புலி என்று அழைக்கப்படும் கௌரவ சேர் எட் டேவி மற்றும் கிங்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியருமான அண்டி ஹிக்கினின்போட்டோன் ஆகியோர் ஆற்றினார்.

வலிகளின் மொழி என்கிற இறுவெட்டு வெளியீட்டோடு தமிழீழமே எமது நோக்கம் என்ற உறுதி மொழியோடு தேசிய கொடிகள் கையேந்தலுடன் நிகழ்வானது நிறைவு பெற்றது. கடந்த காலங்களை விட இம்முறை புலத்தில் நிறைவான மக்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகடைக்காய்களாக உருட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழினம் தங்கள் உரிமையோடும் உணர்வோடும் நின்மதியாக தாயகத்தில் வாழ அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்று இந்த 9ம் ஆண்டு நினைவெழுச்சிநாளில் உறுதிகொள்வோம்.