பொலிஸ் ஊரடங்கா..? அப்படி ஒன்று எந்தவொரு சட்டத்திலும் கிடையாது, மக்களை அச்சுறுத்தும் அரசின் சட்டவிரோத அறிவிப்பே இதுவாகும்...

ஆசிரியர் - Editor I
பொலிஸ் ஊரடங்கா..? அப்படி ஒன்று எந்தவொரு சட்டத்திலும் கிடையாது, மக்களை அச்சுறுத்தும் அரசின் சட்டவிரோத அறிவிப்பே இதுவாகும்...

நாட்டில் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமே கிடையாது. அந்த அறிவிப்பே சட்டவிரோதமானது. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

இது தொடர்பல் மேலும் அவர் கூறியதாவது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அணிதிரளும் மக்களை தடுக்கும் சட்டவிரோத அறிவிப்பு.

பொலிஸ் சட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ பொலிஸ் ஊரடங்கு என்ற ஒன்றை அங்கீகரிக்கவில்லை. 

ஆகவே நான் அனைத்து பிரஜைகளிற்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை. 

ட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு