SuperTopAds

அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் - சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்!

ஆசிரியர் - Admin
அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் - சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்!

மன்னார் - பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதியை, கடந்த திங்கட்கிழமை மாலை கடமை நேரத்தில் இனம் தெரியாத மூவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்புலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குணராசா (வயது-37) என்பவரை கடந்த 14 ஆம் திகதி மாலை கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பையும், எதிர்ப்பையும் மேற்கொண்டனர்.