32 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் திறந்த விமான கதவு
சீனாவில் சாங்குயிங் நகரில் இருந்து திபெத்தின் லாசாவுக்கு சிசுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 128 பேர் இருந்தனர்.
விமானம் 32 ஆயிரம் அடி (9800 மீட்டர்) உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. மணிக்கு 800 முதல் 900 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் விமானிகள் அறையான ‘காக்பிட்’டில் துணை விமானி இருக்கையின் அருகே கதவு பாதி அளவு திறந்தது. இதனால் விமானத்திற்குள் காற்று புகுந்தது. எனவே காற்றை தடுத்து நிறுத்தும் கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானி லியூ சுயாங் ஷியான் உஷாரானார்.
அதை தொடர்ந்து அவர் விமானத்தை சிசுயான் மாகாணத்தில் உள்ள செங்கு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். அதன் மூலம் 128 பயணிகளும் உயிர் தப்பினர்.
இதனால் விமான லியூ சிசுயானை பயணிகளும்இ அதிகாரிகளும் பாராட்டினர். இதற்கு முன்பு இவர் சீன விமான படையில் விமானிகளின் பயிற்சியாளராக இருந்தார்.