தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட கிளை கூட்டம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட கிளை கூட்டம்..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட கிளைக் கூட்டம் இன்றையதினம் சுன்னாகம் நகரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்குறித்த நிகழ்வில் 

 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், செயலாளர் நாகலிங்கம் குருபரன், 

பொருளாளரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான க.சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மாவட்ட அங்கத்தவர்களோடு சமகால அரசியல் நிலை தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

இதன்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நாட்டினுடைய தற்கால அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் விளக்கம் அளித்தார். 

இக்கூட்டத்தில் பிரதேசசபை தவிசாளர், மாநகரசபை மற்றும பிரதேச சபைளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு