காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தில் நம்பிக்கையில்லை - உறவுகள் கண்ணீருடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத் தப்பட்டோர் விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு எந்தக் குழுவை நியமித்தாலும் எமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள காணாமல் போனோர் அலுவலகத்துக்கு முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை நேற்று சனிக்கிழமை முதற் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது.
காணாமல் போனவர்களுக்கான ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட் டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான 7 ஆணையாளர்களோடு இடம்பெற்ற கலந்து ரையாடலின் போதே மன்னார் மாவட்ட த்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் தெரிவித்தனர்.
முதற் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் ஆலோச னைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களிடமும் ஊடக சந்திப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
எனினும் தம்மிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் போது குறித்த மண்டபத்தில் மனித உரிமை கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவிய லாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.
அனுமதிக்கும் பட்சத்தில் தாம் கலந்து கொண்டு கருத்துக்கள் மற்றும் ஆலோசனை களை வழங்க முடியும் என மன்னார் மாவ ட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தெரிவித்தி ருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் கோரி க்கைக்கு அமைவாக குறித்த மண்டபத்தினுள் மனித உரிமைகள் செயற்பாட்டாள ர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அனு மதிக்கப்பட்டனர்.
இதன்போது காணாமல் போனவர்களு க்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதி பதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமை யில் 7 ஆணையாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது கருத்துக்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்த ப்பட்டவர்களின் உறவினர்கள், எமது உறவுகள் தொடர்பாக நாங்கள் பல் வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம்.
அவர்களை கண்டறிய அரசுக்கு நாம் தொட ர்ந்தும் அழுத்தங்களை கொடுத்து வந்தோம் ஆனால் எந்த அழுத்தமும் பயனளிக்க வில்லை.
எமது உறவுகளை தேடி தினம் தினம் அலைந்து திறிகின்றோம்.பல்வேறு முகாம்களுக்கும் தேடிச் சென்றோம். கடந்த காலம் தொட்டு தற்போது வரை எமது வீடுகளுக்கு புலனாய்வுத்துறையினர் வந்து விசாரிக்கி ன்றனர்.
எங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எத்தனையே ஆணைக் குழுக்களிடம் நாங்கள் முறைப்பாடுகளை செய்து விட்டோம்.
இது வரை எமக்கு எவ்வித முடிவுகளும் இல்லை. எமது உறவுகள் காணாமல் போன வர்கள் இல்லை. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை வீடுகளில் வைத்தும், வீதிக ளில் வைத்தும் படையினரின் கட்டுப்பாட்டு பகுதியில் வைத்தும் கடத்தியுள்ளனர்.
இன்று நல்லாட்சி அரசு ஏற்பட்டும் எமது உறவுகளு க்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இல ங்கையில் காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அப்போது எமது பிள்ளைகளை யும், உறவுகளையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா கடத்திச் சென்றுள்ளனர்" என உறவுகள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கினர்.
மேலும் பெண்களை புலனாய்வுத்துறை யினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவ தாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என தம்மை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இதன் போது பதில் வழங்கிய காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், புலனாய்வாளர்கள் உங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் எமக்கு முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அதற்கான அதிகாரம்தம க்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் தமக்கு காணாமல் போனவர்க ளுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பி க்கை இல்லை எனவும், குறிப்பாக காணா மல்போனோர் என்ற வசனத்தை காணா மல் ஆக்கப்பட்டோர் என்று மாற்ற கோரி கட ந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கோரி க்கை விடுத்திருந்தோம்.ஆனால் இன்று வரை மாற்றப்படவில்லை.
எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த காணாமல் ஆக்கப்பட்ட, கடத்த ப்பட்டவர்கள் சார்பாக தமக்கு காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர் பில் நம்பிக்கை இல்லை என பகிரங்கமாக தெரிவித்தனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட மற் றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, குறித்த காணாமல்போன வர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளுக்கு எதி ர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னார் மாவட் டச் செயலகத்திற்கு முன்பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிட த்தக்கது.