கொரிய வான் பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் ! எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ?
அமெரிக்கா மற்றும் தென் கொரிய விமானப்படையினர் இணைந்து இன்று கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டுப்பயிற்சியில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், இரு நாடுகளும் இணைந்து முன்னெடுத்துள்ள கூட்டுப்பயிற்சி எந்நேரமும் போர் தொடங்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது.வடகொரியா செலுத்திய இந்த ஏவுகணை தென்கொரிய வான் எல்லையில் பறந்து, ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தது. சோதனையை தொடர்ந்து அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்கமுடியும் என வடகொரியா அறிவித்தது.இது கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாட்டினது அரச தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர்.பேச்சு வார்த்தையின் முடிவில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா விமானப்படையினர் இணைந்து கூட்டுப்பயிற்சி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இன்று இரு நாட்டு விமானப்படையினரும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்இந்த பயிற்சியில் சுமார் 230 இராணுவ விமானங்கள் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.