அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் எஜமானை துப்பாக்கியால் சுட்ட நாய்

ஆசிரியர் - Admin
அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் எஜமானை துப்பாக்கியால் சுட்ட நாய்

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் விளையாடி கொண்டிருந்த எஜமானரை எதிர்பாராதவிதமாக அவரது நாய் துப்பாக்கியால் சுட்டுள்ளது.

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை வளர்த்து வந்தார். ‘லாப்ராடார்’ இனத்தை சேர்ந்த அந்த நாயுடன் கதிரையில் அமர்ந்த படி இருந்தார்.

துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய் திடீரென அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 ‘எம்.எம்.’ ரக துப்பாக்கியை பறித்தது. எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் பிஸ்டலை இழுத்தது. அதனால் துப்பாக்கி வெடித்து ரிச்சர்ட் ரெமி உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அவசர உதவி மையத்தின் எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி, எனது நாய் சுட்டுவிட்டது உதவிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார்.