செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்;முதலிடத்தில் சீன ஜனாதிபதி
ஃபோர்ப்ஸ் நாளிதழின் உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி 9 வது இடத்தை பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நடப்பு 2018ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் 9 வது இடத்தை பிரதமர் மோடி பெற்றுள்ளார். உலகம் முழுவதும் மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
முதன் முதலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பின்னுக்குத் தள்ளி சீன அதிபர் ஜி ஜின்பிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் சக்தி வாய்ந்த வர்த்தகர்களையும் பின்னுக்குத்தள்ளி பிரதமர் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 3வது இடத்திலும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 4வது இடத்திலும் அமேசான் தலைவர் ஜெஃப் பெசொஸ் 5வது இடத்திலும் உள்ளனர். 13வது இடத்தில் ஃபேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜூகர்பெர்க். 14வது இடத்தில்பிரிட்டன் பிரதமர் தெரசா மே 15வது இடத்தில் சீனப் பிரதமர் லி கேகியாங் 24வது இடத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து பிரதமரை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 32வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 41.2 பில்லியன் டாலர்களாகும்.
போர்ப்ஸ் தெரிவித்துள்ள தகவலில், ”உலகில் பிரபல நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாட்டில் மிகவும் பிரபலமாக மோடி இருக்கிறார். இவரது அரசு கடந்த 2016ல் உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு ரூபாய் நோட்டுக்களை தடை செய்து இருந்தது. சமீபத்தில் உலகத் தலைவர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரையும் சந்தித்தன் மூலம் அவரது புகழும் உயர்ந்துள்ளது.
இந்தப் பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் இடத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.