SuperTopAds

மன்னார் மாவட்டத்திற்கு இன்றுவரை ஒரு தீயணைப்பு சேவை வழங்கப்படவில்லை...

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்திற்கு இன்றுவரை ஒரு தீயணைப்பு சேவை வழங்கப்படவில்லை...

மன்னார் மாவட்டத்தில் திடீர் அனர்த்தங்களின்போது ஏற்படும் தீயை கட்டும்படுத்துவதற்கு மாவட்டத்தில் ஓர் தீ அணைப்பு  சேவை இன்மையினால் பெரும் அவலத்தை எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நீர்மலநாதன் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

மன்னார் மாவட்டத்திற்கு என்று ஓர் தீ அணைப்பு  சேவை இன்றுவரை கிடையாது. இதனை ஏற்படுத்தித் தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதற்கு அரசு சம்மதம் தெரிவித்திருந்தபோதும் இதுவரை என.தப் பணிகளும் இடம்பெறவில்லை.்இதனால் மாவட்டத்தில் திடீர் அணர்த்தம் ஏற்பட்டால் பிரதேச செயலாளர் ஊடாக இராணுவத்தினரையே மக்கள் நாடவேண்டிய நிலையில் உள்ளனர். இராணுவத்தினரிடமும் சாதாரன நீர்த்தாங்கிகளே உள்ளது.

இதனால் மாவன்டத்தில் ஏற்படும் அணர்த்தத்தினை உடனடியாக கட்டுப்படுத்த முடிவதில்லை.்இவ்வாறே இன்று அதிகாலை ( நேற்று ) மின்னல் தாக்குலால் தென்னையில் பரவிய தீ உயரம் காரணமாக அணைப்பதற்கு அப்பகுதி மக்கள்  பெரும் சிரமத்தை எதிர்பொண்டனர். இருப்பினும் நீண்ட போராட்டத்தின் பின்பு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஆண்டு இறுதியில் முகப்பெரும் பனை மரங்கள் நிறைந்த பிரதேசத்தில. ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு தீயை கட்டுப்படுத்தியவேளையில் அரும்பெரும் சொத்தான பனை மரங்களில் 200ற்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிவடைந்தன. இவற்றைக் கருத்தில்கொண்டே கடந்த ஆண்டே பிரதமர. ஊடாக ஓர் தீ அணைப்பு  சேவையை கோரிய நிலையில் மாவட்டச் செயலகம் ஊடாக அதற்கான செலவு மதிப்பீட்டு விபரம் மெறப்பட்டது . இருப்பினும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. 

இவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஓர் தீ அணைப்பு  சேவை கிடையாது. கிளிநொச்சி மாவட்டதில் சந்தையில் ஏற்பட்ட பாரிய அணர்த்தத்தின் பின்பே அந்த மாவட்டத்தை திரும்பி பார்த்தனர் . இருப்பினும் இன்றுவரை முழுமை பெறவில்லை. எனவே இந்த மாவட்டங்களிலும் ஓர் அணர்த்தம் நிகழமுன்பு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என்றார்.