SuperTopAds

2020 இல் ஓய்வு பெறமாட்டேன்; மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதி அறிவிப்பு

ஆசிரியர் - Admin
2020 இல் ஓய்வு பெறமாட்டேன்; மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற மாட்டேன், நாட்டிற்காக நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக உள்ளது, 2020 ஆம் ஆண்டில் ஆட்சியமைக்க சிலர் கனவு காண்கிறார்கள். எமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் கூட 2020 தொடர்பில் உரையாடுகின்றார்கள். ஆனால் இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு மக்கள் தொடர்பில் எவ்வித கவலையும் இல்லை என ஜனாதிபதி மைத்ரிபால தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பில் இன்று ´தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெற்ற போது கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கட்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையின் போது, கடந்த 3 வருட காலப்பகுதிக்குள் எமது அரசாங்கம் இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்களிப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த அனுபவத்துடன் மறுபடியும் ஒரு யுத்தம் வராத விதத்தில் நாம் செயற்பட வேண்டும், யுத்தத்தினால் அல்லது ஆயுதங்களால் எந்த ஒரு பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. அந்த பிரச்சினைகளை மனிதாபிமானத்தால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவருவது தான் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தின் பண்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதிகாரம் இல்லாதவர்கள் எந்த ஒரு கருத்தையும் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும். சிலர் 2020 ஆம் ஆண்டில் நீங்கள் ஓய்வுபெற போகின்றீர்களா? என கேட்கிறார்கள்.

சமூக வளைத்தலங்களிலும் கூட நான் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற போவதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

ஆனால் நான் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற மாட்டேன், நாட்டிற்காக நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக உள்ளது, 2020 ஆண்டில் ஆட்சியமைக்க சிலர் கனவு காண்கிறார்கள். எமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் கூட 2020 தொடர்பில் உரையாடுகின்றார்கள்.

ஆனால் இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு மக்கள் தொடர்பில் எவ்வித கவலையும் இல்லை என ஜனாதிபதி தனது மே தின உரையின் போது குறிப்பிட்டார்.