ஓகி புயல்.. மாயமான மீனவர்களை மீட்க உயர்நீதிமன்றத்தில் மனு.!
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்டலில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் சூர்யபிரகாஷ் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் சுந்தர் அமர்வு முன் முறையிட்டுள்ளார்.
அதில், கடலில் மீன் பிடிக்கச் சென்ற 2000 மீனவர்கள் ஓகி புயல் காரணமாக மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்க உடனடியாக மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வக்கீல் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.