SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 71 நாட்களான சிசு மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 71 நாட்களான சிசு மரணம்..!

பிறந்து 71 நாட்களேயான சிசு ஒன்று நேற்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசி குளத்தை சேர்ந்த காண்டீபன் அஸ்மிகா என்ற சிசுவே உயிரிழந்துள்ளது. 

நேற்றுமுன்தினம் பிற்பகல் சிசுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 

சிசு உயிரிழந்துள்ளது.