SuperTopAds

ஜேர்மனில் மிக குறைந்த வயதில் இரு உயர் பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்த யாழ்ப்பாண இளைஞன்!

ஆசிரியர் - Editor I
ஜேர்மனில் மிக குறைந்த வயதில் இரு உயர் பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்த யாழ்ப்பாண இளைஞன்!

வடமேற்கு ஜேர்மனில் மிக குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று தமிழ் இளைஞனாக அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ர லோ மற்றும் பட்டய கணக்காளராக (master low and chartered accountant) குறைந்த வயதில் கல்விப் புலத்தில் சாதனை படைத்துள்ளார்.

அனங்கன் சின்னையாவை கௌரவிக்கும் முகமாக கடந்த 22 ஆம் திகதி ஜெர்மனியின் வடமேல் மாநில நிதி அமைச்சு தனது உத்தியோகபூர்வ இலச்சினை பொறிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கி கொளவுரவித்தது.

இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இலங்கை இந்து பொளத்த கலாச்சார பேரவையின் பொதுச்சயலாளரும் ஜெர்மனியின் இலங்கைக்கான குடிவரவு குடியகல்வு 

சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவருமான தேசமானிய எம்.டி இராமச்சந்திரனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.