பூஸ்டர் தடுப்பூசி வழங்கலில் வடமாகாணம் கடைநிலையில்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வடக்கு சுகாதார பணிப்பாளருக்கு விடுத்துள்ள உத்தரவு..

ஆசிரியர் - Editor I
பூஸ்டர் தடுப்பூசி வழங்கலில் வடமாகாணம் கடைநிலையில்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வடக்கு சுகாதார பணிப்பாளருக்கு விடுத்துள்ள உத்தரவு..

வடமாகாணத்தில் பூசி தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் தொகை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சனத்தொகையில் குறைவாக வாழும் இலங்கை நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது. 

3வது டோஸ் தடுப்பூசி வழங்கல் இடம்பெற்றுவரும் நிலையில் பல மாகாணங்களில் 60 வீதத்துக்கு அதிகமானவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

ஆனால் வடமாகாணத்தை பொறுத்தவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுகின்ற நிலையில் 

எதிர்வரும் மார்ச் மாதத்தில் 40வீதமாக அதிகரிப்பதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு