யாழ்.மாவட்டம் உள்ளிட்டு நாடு முழுவதும் டெங்கு அபாயம் தீவிரம்! நுளம்பை கட்டுப்படுத்தும் இரசாயனம் இல்லை, வடக்கில் நிலைமை மோசம்..
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செலலும் நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது விசிறப்படும் ரெக்னிக்கல் மலத்தியோன் எனப்படும் இரசாயன பொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாவ தொிவிக்கப்படுகின்றது.
வடமாகாணத்திலும் இந்த இரசாயனம் தற்போது இல்லை என்று வடமாகாண சுகாதார திணைக்கள வட்டாரங்கள் தொிவித்தன. நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இந்த வருடத்தின் முதல் 51 நாட்களில் 9 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் 2 உயிரிழப்புக்களம் டெங்க தொற்றால் பதிவாகியுள்ளது. டெங்கின் புதிய திரிபினால் டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கின்றதா? என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் டெங்கு ஒழிப்பிற்காக உள்ளராட்சி மன்றங்களுடன் இணைந்து சுகாதார திணைக்களம் மருந்து விசிறும் செயற்பாட்டை முன்னெடுத்து வந்தது.
மண்ணெண்ணையுடன் ரெக்னிக்கல் மலத்தியோன் என்னும் இரசாயனத்தை கலந்தே இந்த விசிறல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவந்தது. தற்போது ரெக்னிக்கல் மலத்தியோனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டும் வடமாகாணத்திற்க குறித்த இரசாயனம் வழங்கப்படவில்லை.