அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் 35 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்டது பேருந்து சேவை..!

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் 35 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்டது பேருந்து சேவை..!

வேலணை - புங்குடுதீவு - இறுப்பிட்டி ஊடாக பயணிகள் பேருந்து சேவை 35 வருடங்களின் பின் இன்று மீளவும் ஆரம்பக்கப்பட்டிருக்கின்றது. 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் புதி பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதி மக்களின் அவசிய தேவை கருதியதான கோரிக்கையை ஏற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலலகிருஸ்னனுக்கு வழங்கியிருந்த அறிவுறுத்தலுக்கிணங்க

இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வத்துடன் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிப்பட்டிருந்தது. இதற்கிணங்க குறித் பகுதிக்கான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை 

மேற்கொள்வதாக வடபிராந்திய பொது முகாமையாளர் குணபால செல்வம் தெரிவித்திருந்தமைக்கு இணங்க இன்றையதினம் குறித்த பேருந்து சேவையை கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். 

இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த சேவையானது புங்குடுதீவு பெருங்காட்டு சந்தியூடாக இறுப்பிட்டி கேரதீவு மடத்துவெளியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான சேவையை முன்னெடுக்கவுள்ளது. 

இதேவேளை கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த சேவை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாராண சூழ்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சேவையானது தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரைகாலமும் புங்குடுதீவு பிரதான மார்க்கங்களை முன்னிறுத்தி போக்குவரத்து சேவை முன்னெடுத்துவந்திருந்த நிலையில் இறுப்பிட்டி உள்ளிட்ட குறித்த பகுதிகளுக்கான சேவை இன்மையால் 

மக்கள் போக்குவரத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துவந்திருந்தனர். இந்நிலையால் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் பொதுமக்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களை நாளந்தம் சந்தித்துவந்திருந்த நிலையில் 

இன்றையதினம் குறித்த சேவையை தமக்கு ஏற்படுத்தி தந்தமைக்காக குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு