சர்ச்சைக்குள்ளாகுமா சீ.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி பதிவு? சீ.விக்கு நெருக்கமான சிலரும் தேர்தல் ஆணைக்குழு கவனத்திற்கு கொண்டு சென்றனராம்..

ஆசிரியர் - Editor I
சர்ச்சைக்குள்ளாகுமா சீ.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி பதிவு? சீ.விக்கு நெருக்கமான சிலரும் தேர்தல் ஆணைக்குழு கவனத்திற்கு கொண்டு சென்றனராம்..

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சி பதிவு தொடர்பாக சக தமிழ் கட்சிகளால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனினும் கட்சி பதிவு தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் திணைக்களம் முறையாக பேணாமையால் அவருடைய கட்சி தப்பிக்கும் எனவும் கூறப்படுகிறது. 

சீ.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டது. 

2020ம் ஆணடு குறித்த கட்சியை பதிவு செய்வதற்கு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்தும் 2021ம் ஆண்டு சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் பதிவுக்கு விண்ணப்பித்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு அதனை அங்கீகரித்தது. 

ஆனால் பதிவுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட கட்சி அடுத்த ஆண்டே திரும்பவும் விண்ணப்பிக்க முடியாது. 

இதனை அடிப்படையாக கொண்டு 2020ம் ஆண்டு பதிவுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சில சக தமிழ் கட்சிகளை சேர்ந்தவர்கள் 

விசேடமாக சீ.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான தரப்புக்கள் இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். 

இந்நிலையில் விடயத்தை ஆராய்ந்த தேர்தல் ஆணைக்குழு 2020ல் சீ.வி.விக்னேஸ்வரன் விண்ணப்பித்த ஆவணங்கள் எவையும் தேர்தல் ஆணைக்குழுவில் இல்லை எனவும், 

அதனால் 2021ம் ஆண்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு