வீட்டுத்திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்..! ஊடக அமைச்சரிடம் அங்கஜன் இராமநாதன் நோில் சுட்டிக்காட்டு..!

ஆசிரியர் - Editor I
வீட்டுத்திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்..! ஊடக அமைச்சரிடம் அங்கஜன் இராமநாதன் நோில் சுட்டிக்காட்டு..!

யாழ்.மாவட்டத்தில் நிரந்தர வீடற்ற ஊடகவியலாளர்களுக்கு அரச வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டுமாறு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான அங்கயன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்தார். 

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலின் முன் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போது ஊடகத்துறை அமைச்சராக இருக்கின்ற டளஸ் அழகப்பெரும காலத்தில் ஊடகவியலாளர்கள் தமக்கான தேவைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன். ஏனெனில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கல்வி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 

அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். தீவக வலயத்தின் கல்வியை முன்னேற்ற நான் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சின் நிதியை தாண்டி மடிக்கணனி பெற்றுத்தந்தமை அவரின் மக்கள் பணி செய்யும் மனப்பாங்கை பிரதிபலிக்கின்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள் பல்வேறுபட்ட சவால்களை தாண்டி தமது பணியை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் கறுப்பு பட்டி அணிந்து இந்நிகழ்விவுக்கு வந்தமை அவர்களின் கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் அவற்றுக்கான நீதியை எதிர்பார்த்தே ஆகும்.

அவர்கள் கேட்கின்ற விடயம் அல்லது அவர்கள் எதிர்பார்க்கின்ற விடையம் நியாயமானதாக இருக்கின்றது. யாழில் இன்று பல ஊடகவியலாளர்கள் சொந்த இருப்பிடங்கள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். 

ஊடகங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்ற நிலையில் மக்களுக்குத் தேவையான விடையங்களை விடுத்து மக்களை குழப்பும் வகையில் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் ஊடகங்கள் பெரும்பங்காற்றி 

மக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்த்தன .சமூக ஊடகங்களின் பங்களிப்பு அதிகமாக காணப்படுகின்ற நிலையில் அவற்றில் சில ஊடகங்கள் மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிட முனைகிறார்கள். 

சமூக ஊடகங்களை அரச தகவல் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்வதன் மூலம் அவர்களுக்கும் பாதுகாப்பும் பலனும் கிடைக்கின்றது. ஆகவே ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் ஊடக விழுமியங்களுடன் செய்திகளை பிரசுரித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு