SuperTopAds

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்..! யாழ்.நகரில் பாரிய மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்..! யாழ்.நகரில் பாரிய மக்கள் போராட்டம்..

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, 

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு 

போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு 

யாழ்.முனியப்பர் கோவில் பகுதி வரை பேரணியாக சென்று அங்கும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.