SuperTopAds

அடிக்கல் நாட்டுவதுடன் திட்டங்கள் முடிவடைவதில்லை. விமர்சனம் செய்வோர் ஆராய்தும் பார்க்கலாம்! அங்கஜன் இராமநாதன்..

ஆசிரியர் - Editor I
அடிக்கல் நாட்டுவதுடன் திட்டங்கள் முடிவடைவதில்லை. விமர்சனம் செய்வோர் ஆராய்தும் பார்க்கலாம்! அங்கஜன் இராமநாதன்..

யாழ்.மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் அடிக்கல் நாட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. அடிக்கல் நாட்டுவதுடன் நின்றுவிடும். என கூறுபவர்கள் நிறைவடைந்த திட்டங்களை பார்வையிடலாம். 

என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். யாழ்.பிரதேச செயலகப் பிரிவில் நேற்று இடம்பெற்ற ஒரு லட்சம் திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஒரு லட்சம் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 432 கிராமங்களிலும் செயற்றிட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கடந்த வருட திட்டங்களுக்காக 

நான் அடிக்கல் நாட்டியபோது அடிக்கல் நாட்டலுடன் நிறைவடைந்துவிடும் என பல ஊடகங்கள் தெரிவித்தன. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சிறந்த திட்டமிடல் மூலம் பல செயற்திட்டங்களை உரிய காலப்பகுதியில் நிறைவேற்றினோம்.

நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் எண்ணக் கருவுக்கு அமைய மஹிந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிநடத்தலின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மேற்பார்வையில்,

குறித்த செயற் திட்டங்கள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. எமது அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 3 மில்லியன் ரூபாய் நிதியானது, 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமங்களின் தேவைகள் கிராமத்துக்கு கிராமம் மாறுபடும் என்பதை உணர்ந்து, யாழ்.மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் தன்னிறைவான அபிவிருத்தி கிடைக்க வேண்டும். 

18 நாட்கள், 216 மணித்தியாலங்கள், 3023 கிலோ மீற்றர்கள் பயணித்து 15 பிரதேச செயலக பிரிவுகளின் 435 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து, மக்களிடம் அவர்களின் நியாயமான தேவைபாடுகளை கேட்டறித்து திட்டங்களை வகுத்துள்ளோம் என்றார்.