SuperTopAds

யாழ்.பருத்தித்துறை கடலில் கடும் பதற்றம்..! இந்திய மீனவர்கள் கைது, அமைச்சர் டக்ளஸின் சமரச முயற்சி நிராகரிப்பு,.

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடலில் கடும் பதற்றம்..! இந்திய மீனவர்கள் கைது, அமைச்சர் டக்ளஸின் சமரச முயற்சி நிராகரிப்பு,.

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றய தினம் இரவு இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலையேற்பட்டதுடன், இரு இந்திய இழுவை படகுகள் முற்றுகையிடப்பட்ட நிலையில் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

பருத்தித்துறை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய இழுவை படகுகள் அங்கு தொழில் செய்து கொண்டிருந்த நிலையில் அதிரடியாக பருத்தித்துறை மற்றும் சுப்பர்மடம் பகுதிகளில் இருந்து சுமார் 15 வரையான படகுகள் இந்திய இழுவை படகுகளை முற்றுகையிட்டு வலைகள், மீன்களை கைப்பற்றினர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் எமது மீனவர்களிடம் சிக்கியிருந்த இந்திய இழுவை படகை கைப்பற்றிய கடற்படையினர் அதிலிருந்த இந்திய மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கொண்டு சென்றுள்ளனர். 

இதேவேளை பதற்றமான சூழலுக்கு நடுவே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு சென்ற சமரசம் செய்ய முயற்சித்தபோதும் இந்த விடயத்தில் அமைச்சர் தலையிடவேண்டாம். என மீனவர்கள் கூறியுள்ளனர்.