வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

யாழ்.மத்திய கல்லுாரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா, விபரங்களை தங்களிடம் வழங்கமாறு முன்வைத்த கோரிக்க்கையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். 

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், உறவுகளை திருப்பித்தா, நடமாடும் செயலமர்வில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை கையில் எடுக்காதேபோன்ற பல கோஷங்களை எழுப்பினார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் நிகழ்வு மண்டபத்திற்குள் செல்ல முற்படுகையில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் அங்கு தள்ளு முள்ளு நிலை ஏற்பட்டதுடன் குழப்பமான நிலை ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை தன்னிடம் தருமாறு ஆளுநர் கூறிய போது அதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் பல முறை நாங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளோம்.

இதுவரை எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தனர்.இதனை அடுத்து அங்கிருந்து விலகிச் சென்றார். 

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் அங்கு கூடியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு