தனது அதிகார வரம்பு தொியாமல் திணறும் ஆளுநரே வடமாகாணத்தில் அரச நிர்வாகம் வினைத்திறனற்று இருப்பதற்கு காரணம்..!
வடமாகாண ஆளுநருக்கு தன்னுடைய அதிகார வரம்பு தொியவில்லை. என கூறியுள்ள வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மாகாண ஆளுநராக இருப்பவர் மாகாணத்திற்கு உட்பட்ட அதிகாரிகளை வழி நடாத்த முடியும் அது ஆளுநருக்கு உரிய அதிகாரம், ஆனால் மத்தியின் கீழ் உள்ள ஒரு அதிகாரிக்கு உத்தரவிடும் அதிகாரம் எந்த சட்ட ஏற்பாட்டில் உள்ளது.
மாவட்டச் செயலகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலக உதவியாளருக்கு கூட ஆளுநர் எந்த உத்தரவும் வழங்க முடியாது. மாகாண நிர்வாகங்களில் பல பிரச்சணை இருக்கும்போது மத்திய அரசிற்கு உட்பட்ட திணைக்களங்களில்
கவனம் செலுத்தி அதிகார வரம்பை மீறிய உத்தரவுகளை வழங்குவதனால் வடக்கு மாகாணத்தில் மத்தியினதும் மாகாணத்தினதும் நிர்வக இயந்திரம் வினைத்திறன் அற்றுக் காணப்படுகின்றது.
இவ்வாறு அரச இயந்திரம் வினைத் திறன் அற்றுக் கணப்படுவதற்கு உத்தியோகத்தர்கள் அல்ல காரணம். உன்மையான நிர்வாக நடைமுறையும் அதிகார வரம்பும் தெரியாத ஆளுநரே காரணமாகின்றார் எனத் தெரிவித்தார்.