யாழ்.சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் நீதிவானால் எச்சரிக்கப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் நீதிவானால் எச்சரிக்கப்பட்டனர்..!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். 

பாடசாலை நாட்களில் கல்வியில் கவனம் செலுத்தும் படியும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் நீதிமன்ற தண்டனைகளை பெறவேண்டிவரும் எனவும் 

நீதவான் எச்சரித்ததுடன் பெற்றோர் முன்னிலையில் அறிவுரைகளையும் கூறியிருந்ததுடன் மூவரையும் தலா 75000 பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு