வடமாகாண அரச ஊழியர்களுக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள அறிவிப்பு! 5 மாவட்டங்களிலும் தங்கியிருந்து கண்காணிக்க தீர்மானம்..
வடமாகாணத்தில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் குறை நிறைகளை கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடகையில்,
வடக்கு மாகாண ஆளுநராக நான் கடமைகளை பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.சிலர் நேரிலும் வந்து என்னை சந்திக்கின்றார்கள்
அவரை சந்திக்க வருபவர்கள் சிறுசிறு பிரச்சினைகளோடு வருகின்றார்கள் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சாதாரண மட்டபிரச்சனைகள் அதாவது கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக
தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் ஆனால் அவர்களால் தீர்க்கப்படாத விடத்து என்னிடம் வருகின்றார்கள் நான் என்னிடம் வருபவர்களை திருப்பி அனுப்ப முடியாது, அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்,
இதற்குப் பிறகு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். அதாவது அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொடர்பில்
ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்.