மக்களின் நிலங்களை விடுவிப்போம் என ஜனாதிபதி கூறிய அன்றே யாழ்.வலி,வடக்கில் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து வீதி அமைப்பு..

ஆசிரியர் - Editor I
மக்களின் நிலங்களை விடுவிப்போம் என ஜனாதிபதி கூறிய அன்றே யாழ்.வலி,வடக்கில் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து வீதி அமைப்பு..

மக்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படும். என ஜனாதிபதி கூறிய அன்றே யாழ்.வலி,வடக்கில் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து விமான நிலையத்திற்கான வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வீதியில் சுமார் 400 மீற்றர் நீளமான வீதியை விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். குறித்த வீதியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 

இந்நிலையில் அந்த வீதியை விடுவிப்பதாக கூறிய பாதுகாப்பு தரப்பினர் அதற்கு மாறாக மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து புதிய வீதியை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். 

நேற்றய தினமும் ஜனாதிபதி நாடாளுமன்றில் கொள்கை விளக்கவுரையாற்றும்போது தமிழ் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படும். என கூறியிருந்த அன்றே வலி,வடக்கில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து 

வீதி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. நேற்றய தினம் வீதி மற்றும் 4 மீற்றர் அகலமான வெள்ள வாய்க்காலுக்காகவும் மக்களின் நிலம் கேட்பாரற்று பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு