SuperTopAds

தமிழ் - முஸ்லிம்கள் மொழியால் இணைந்து செயலாற்றினாலே தீர்வு - செல்வம் எம்.பி

ஆசிரியர் - Admin
தமிழ் - முஸ்லிம்கள் மொழியால் இணைந்து செயலாற்றினாலே தீர்வு - செல்வம் எம்.பி

வடகிழக்கிலுள்ள தமிழ்-முஸ்லிம்கள் மதத்தால் வேறுபடாமல் மொழியால் இணைந்து செயலாற்றவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செ்லவம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

புதியகுரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டார், மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

வடகிழக்கிலுள்ள மக்களின் தேவையொன்றாகவுள்ளது, இந்த நாட்டில் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் வாழவேண்டிய ஆசைதான் அது, தெற்கிலுள்ள அரசியல் சமூகம் இந்த இரு இனங்களையும் காலம் காலமாக பிரித்தாள்கிறது. இந்த மாயைக்குள் இருந்து வெளியேற வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம்காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் இணைந்து தீர்வுக்காக போராட வேண்டும் என்றார்.