மட்டக்களப்பில் ஊடகப் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம்

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பில் ஊடகப் படுகொலைக்கு நீதிகோரி போராட்டம்

ஊடகவியலாளர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளால் கொல்லப்பட்ட - காணாமல் ஆக்கப்பட்ட - பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகேட்டு வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் ஒன்றிணைந்து இன்று (28) சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு - கிழக்கில் போர் இடம்பெற்ற சூழலில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அரச படைகளாலும் அதனோடிணைந்து  செயற்பட்ட துணைப்படைகளாலும் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நீதிகேட்டு மாமனிதர் தர்மரத்தினம் சிவராம்(தராகி) படுகொலை அரங்கேற்றப்பட்ட நினைவு நாளில் வடக்கு - கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று மட்டக்களப்பில் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு