யாழ்.பொதுநுாலகம் எரிக்கப்பட்ட நாளில் 100 நுாலகங்களை செயற்படுத்தும் விசேட திட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொதுநுாலகம் எரிக்கப்பட்ட நாளில் 100 நுாலகங்களை செயற்படுத்தும் விசேட திட்டம்!

யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்ட நினைவு நாளில் வடமாகாணத்தில் 100 நூல் நிலையங்களை செயற்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தேசிய நூலக தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நூலகங்களை கொளரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சிறந்த நூலகமாக சுன்னாகம் பிரதேச சபை நூலகம், தேசிய நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டுகிறேன். புத்தக வாசிப்பு வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன் 

சமூகத்தில் வாசிப்பை அதிகரிக்க வேண்டிய கடமை பிரதேச நூலகங்களுக்கே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பிரதேச சபைகள் அதற்கான செயற்திட்டங்களை முன்மொழிந்து செயலாற்ற வேண்டும். 

யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்டு 40 வருடங்கள் கடந்த நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் யாழ்.பொதுசன நூலகம் எரியூட்டப்பட்ட தினத்தில் இச்செயற்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனது 2022 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் ஊடாக 01 மில்லிய ரூபாவை வவுனியா நகரசபை நூலகத்தின் அபிவிருத்திக்கு தேசிய நூலகத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற் கொண்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சோ.சுகிர்தன் அவர்களும் தேசிய நூலகத்தின் தலைவர், பணிப்பாள நாயகம், உள்ளிட்ட பணிக்குழாமும், விருதுகளை பெற்றுக் கொண்ட நூலகங்களின் 

நூலகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு