யாழ்.மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை அதிபர் தேர்தில் முறைகேடு! வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு சென்றது..
யாழ்.மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் நேர்முகத் தேர்வில் பல குறைபாடுகள் இடம்பெற்றதாக நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அதிபர் ஒருவர் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 11.8.2021ம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நியமனத்திற்கான புள்ளி வழங்களில் பின்வரும் குறைபாடுகள் இடம்பெற்ற நிலையில் தகுதியுடைய அதிபர் நிராகரிக்கப்பட்டதாக நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அதிபர் ஒருவர்,
வடமாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் குற்றச்சாட்டு கடிதத்தை எழுதியிருக்கிறார். இதன்படி குறித்த அதிபர் நேர்முகத்தேர்வில் புள்ளி வழங்கல் இடம்பெற்ற நிலையில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பபட்ட அதிபர்கள் பட்டியல் வரிசைப் படுத்தப்பட்டது.
45 நாட்கள் கடந்த நிலையில் மாகாண கல்வித் திணைக்களத்தினால் புள்ளி பட்டியலை மீண்டும் சீராக்கம் செய்து புதிய அதிபரை பரிந்துரைக்குமாறு கோரப்பட்டதற்கமைய வலயக்கல்வி அலுவலகத்தால் மீண்டும் சீராக்கம் செய்து மகாணக்கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பபட்டது.
இரண்டாவது தடவை சீராக்கம் செய்தமை தொடர்பில் வலய கல்வி பணிப்பாளர் 1/11/2021 நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். நேர்முகத்தேர்வு முடிவடைந்த பின்னர் புள்ளி பட்டியலை சீராக்கம் செய்ய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் நேர்முகத் தேர்வு முடிந்தபின் வலயக்கல்வி அலுவலகம் தலையீடு செய்வது ஏற்புடையதல்ல. மாகாண கல்வித் திணைக்களத்தினால் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பான 2021/1 அதிபர் நியமனம் சுற்று நிருபத்தின் பிரகாரம் வலயக்கல்விப் பணிப்பாளர் தலைவராக செயற்படுவதோடு
கோட்டக் கல்விப் பணிப்பாளர் சபையில் உள்ளடக்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி குறித்த பாடசாலைக்கு தகுதியான ஒருவரை நியமனம் செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.