SuperTopAds

லண்டனில் கடைக்குள் நுழைந்த திருடனை மிளகாய்த் தூள் வீசி மடக்கிப் பிடித்த தம்பதி!

ஆசிரியர் - Admin
லண்டனில் கடைக்குள் நுழைந்த திருடனை மிளகாய்த் தூள் வீசி மடக்கிப் பிடித்த தம்பதி!

பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

 இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய திருடனிடமிருந்து தமிழ் தம்பதி, பொருட்களை பாதுகாத்த விதம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திலீபன் தில்லைநாதன் மற்றும் ரம்யாமுகி இதயநாதன் ஆகியோரே கத்தியோடு நுழைந்த திருடனை பிடித்துள்ளனர். இறுதி வரை திருடனுடன் போராடிய இவர்கள் திருடனை வெறும் கையுடனே ஓட வைத்துள்ளனர்.

Paul Christian Callaghan என்ற திருடனுடன் இந்த தம்பதியினர் போராடிய துணிச்சலான சம்பவம் வர்த்தக நிலையத்தில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. 45 வயதான திருடனுக்கு தற்போது நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.

முகத்தை முழுவதும் மூடிக்கொண்ட திருடன் North Ormesby, Middlesbrough பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்றுள்ளார். கடையில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டிப் பணத்தை தருமாறு திருடன் கூறியுள்ளார். பெண் தொலைபேசியி் கணவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் கணவர் வரும் வரை பணப்பெட்டியை திருடன் நெருங்காத வகையில் நீளமான உலோகப் பொருள் ஒன்றினால் திருடனை தாக்குவதற்கு பெண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மிளகாய் தூளை நீரில் கலந்து கொண்டு வந்த கணவர் திருடன் மீது அதனை ஊற்றினார். திருடன் அங்கிருந்த கணனியை எடுத்துக் கொண்டு சைக்கிளில் தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் பெண் திருடனின் சைக்கிள் சக்கரத்தை பிடித்து கொண்டு போராடினார். எனினும் நீண்ட போராட்டத்தின் பின்னர் கணவனும் மனைவியும் இணைந்து திருடனை பிடித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட திருடன், மன்னித்து விடுங்கள். நான் அப்படி செய்து விட்டேன். நான் யாரையும் காயப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் Teesside Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி Andrew Turton கேட்டு கொண்டார். எனினும் நீண்ட 5 வருடங்களும் ஒரு மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி Sean Morris குறிப்பிட்டுள்ளார். இறுதி தீர்ப்பிற்கு வழக்கு மீண்டும் கூடும் என கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.