அமெரிக்காவை முந்தும் ரஷ்யா: வடகொரியாவுக்கு பாடம் புகட்ட முடிவு
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு திடீர் ராணுவ தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாரெடுத்து வருவதாக அந்த நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவையே அழித்தொழிக்கும் வல்லமை தங்கள் நாட்டுக்கு உள்ளதாக இந்த வார துவக்கத்தில் வடகொரியா அறிவித்துள்ளதை அடுத்தே ரஷ்யா இந்த கடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவின் இச்செயல் ரஷ்யாவை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாக கூறும் ரஷ்யாவின் பாதுகாப்புதுறை செயலர் Nikolai Patrushev, வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கையானது அனைத்து விவகாரங்களுக்குமான தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தொடர்ந்து விமர்சித்தும் வருகிறது.
மேலும் வடகொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் என்பது கால விரயம் எனவும், ராணுவ நடவடிக்கையே தகுந்த முடிவு எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த விவகாரத்தில் அதிகம் அக்கறை செலுத்தாதிருந்த ரஷ்யா தற்போது வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது உலக அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இன்னொரு உலக யுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சமும் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.