உருவான புதிய காற்றழுத்தம்.! புயலாக மாறினால் தமிழகத்திற்கு பெரும்பாதிப்பு..!!
சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்டது.
இந்நிலையில் தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது.
இது வலுவடைந்தால் புயல்சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் கனமழையுடன் கூடிய புயல் காற்று வீசும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் போன்று இந்த புதிய புயல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.