SuperTopAds

கரைவலைகளில் சிக்கிய பெருந் தொகைப் பாம்புகள்! ஆபத்தின் அறிகுறியா?

ஆசிரியர் - Editor II
கரைவலைகளில் சிக்கிய பெருந் தொகைப் பாம்புகள்! ஆபத்தின் அறிகுறியா?

மட்டக்கிளப்பு நாவலடியில் இன்று காலை கரை வலத் தொழிலில் ஈடுபட்டிருந்த அனைத்து மீனவர்களினது வலைகளிலும் பாம்புகளே பிடிபட்டள்ளன.

அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக பாரிய துன்பங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்றும் மீன்கள் பிடிபடாமை பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் அரசாங்கமும் தங்களுக்கு எந்த விதமான உதவிகளையும் வழங்குவதில்லை இல்லை என்றும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தள்ளனர்.

தமிழகம் மற்றும் அலங்கையில் சுனாமி அனர்த்தம் என அண்மைக்காலமாக பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெருந்தொகையான பாம்புகள் கடற்கரையை அண்மித்த பகுதியில் பிடிபட்டுள்ளன. இது ஆபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2004 ம் ஆண்டு சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகைப் பாம்புகள் கரைக்கு வந்திருந்தமை குறிப்படத்தக்கதாகும்.