யாழ்.பல்கலைகழக பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர் தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர் தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பம்..

யாழ்.பல்கலைகழக - பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்கான 2ம் கட்ட கட்டிட நிர்மாண பணிகள் தொடங்கப்படவுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உயிர்த்தொகுதித் தொழிநுட்ப பீடத்திற்குத் தேவையான கட்டிடங்களுக்கான கிளிநொச்சி கட்டிட நிர்மாணக் கருத்திட்டம், 

உலக வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்காக 2019 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் கட்டிடங்களை கிளிநொச்சியில் நிர்மாணிப்பதற்காக தேசிய போட்டி விலைமுறி நடைமுறையைப் பின்பற்றி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 10 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தத்தை 

போக்கஸ் மார்க்கட்டிங்க் அன்ட் இன்ஜியரிங்க் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு