SuperTopAds

சிரமதான பணிகளை இராணுவத்திடம் ஒப்படைக்க நல்லுார் பிரதேசசபையில் தீர்மானம்! எதிர்த்து வெளியேறியது த.தே.மக்கள் முன்னணி..

ஆசிரியர் - Editor I
சிரமதான பணிகளை இராணுவத்திடம் ஒப்படைக்க நல்லுார் பிரதேசசபையில் தீர்மானம்! எதிர்த்து வெளியேறியது த.தே.மக்கள் முன்னணி..

நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் சிரமதான பணிகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறித்த தீர்மானத்தை தீவிரமா எதிர்த்துள்ளது. 

ஈழமக்கள் ஐனநாயக்க் கட்சியும், த.தே.கூட்டமைப்பும், தமிழர் விடுதலை கூட்டணியும், மாம்பழக்கட்சியும் ஆதரிக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வெளியேறியது.

நேற்று 26.11.2021 வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச்சபை கூட்டிய விசேடகூட்டத்தில் திருநெல்வேலி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தினை இராணுவத்திடம் 

சிரமதானம் மற்றும் அபிவிருத்திப்பணிக்கு ஒப்படைப்பதற்கான இறுதித்தீர்வு எடுக்கப்பட்டது. இதனை இராணுவத்திடம் ஓப்படைப்பதற்காக கூட்டமைப்பும், ஈழமக்கள் ஐனநாயக்க்கட்சி, மாம்பழம் போன்ற கட்சிகள் இணங்கியுள்ளன. 

எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி மட்டும் அதனை எதிர்த்ததோடு அவ்விடத்திலிருந்து வெளியேறியது.